வாடகை தாய் முறையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய சட்டத்தின் படி வாடகை தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் உறவினர்கள் மூலமாக மட்டுமே தான் பெற முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
நட்புடன் உங்களோடு மனநல சேவை
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் "நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்ட துவக்க விழாவில்" திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், 14416 என்ற இலவச என் தொலைபேசி வாயிலாக மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் மேற்கண்ட தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவித்தார். மேலும் இந்த ஆலோசனை மையமானது அரசின் பிற சேவைகள் துறையுடன் இணைந்து மக்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படும் என கூறினார். சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சேவை சார்ந்த இலவச எண்கள் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக நீட் தேர்வு காலத்தில் பாதிக்கப்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளான மாணவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் வரை தொடர்பு கொண்டு நிவாரணம் பெற்றதாக தெரிவித்தார்.
நயன்தாரா வாடகை தாய் விவகாரம்
பிரபல நடிகை நயன்தாரா வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றதில் எந்த விதிமுறைகளும் இல்லை எனவும் மேலும் மத்திய அரசு வாடகைத்தாய் முறையில் கடந்த ஜனவரி மாதம் திருத்தம் கொண்டு வந்த நிலையில் அதற்கு முன்னர் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே வாடகத்தாய் முறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு குழந்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட கருத்தரிப்பு சிகிச்சை மையம் முறையான ஆவணங்களையும் மருத்துவ குழு மேற்கொண்ட விசாரணையின் போது சமர்ப்பிக்கவில்லை எனவும் முறையான தகவல் அளிக்காத காரணத்தால் மேற்கண்ட மருத்துவ மையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மருத்துவமனை மீது நடவடிக்கை
தற்போது வாடகை தாய் முறையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய சட்டத்தின் படி வாடகை தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் உறவினர்கள் மூலமாக மட்டுமே தான் பெற முடியும் எனவும் இதனால் முன்பு போல எளிதாக வாடகைத்தாய் முறையில் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் பல கட்டுப்பாடுகள் இந்த புதிய சட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வரும் தனியார் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அத்தகைய கருத்தரிப்பு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்