தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்குகாய்ச்சல்..? 10 வாரத்தில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்- மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Oct 25, 2023, 10:28 AM IST
Highlights

மழைக்காலத்தில் வரும் நோய் பாதிப்புகள் தவிர்க்க முடியாத ஒன்று. தமிழ் நாட்டை பொருத்த வரையில் டெங்கு காய்ச்சலை மிக சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தமிழ்நாட்டில் இதுவரை 5500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 
 

8 கிலோ நடை பயிற்சி

'நடப்போம் நலம் பெறுவோம்- Health Walk 8Km என்னும் நடை பயிற்சியை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து  அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார். மக்களை தேடி மருத்துவம், உயிர்காப்போம் நம்மை காப்போம் போன்ற பல்வேறு திட்டங்கள் மிகச் சிறப்பான வகையில் மக்களின் பாராட்டுகளை பெற்று  இயங்கிக் கொண்டு வருகிறது.  அந்த வகையில் டோக்கியோவில் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை ஒன்றில் துவாக் என்ற பெயரில் சிறப்பாக நடைபெறுகிறது..  8 கிலோமீட்டர் தூரத்திற்கான நடைபாதை மக்கள் தினந்தோறும் நடப்பதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதே போல தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

Latest Videos

4 ஆம் தேதி தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

இந்த சாலைகளில் கனரக வாகனங்கள் அனுமதிக்க படாது. மேலும் அந்த சாலைகளில் மக்கள் ஓய்வெடுக்க இடங்களும் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த 8 கி.மி தொலைவு ஹெல்த் வால்க்  சாலை மக்களிடம் நடைபயிற்சியை ஊக்குவிக்க துவங்கப்படுகிறது. வரும் 4 ஆம் தேதி காலை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சாலை வழியே நடக்க இருக்கிறார்கள். நடைபயிற்சிக்கு வருபவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும், குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது போன்ற சாலை 8 கி.மீ  நீளத்திற்கு ஜப்பான், டோக்கியோ நகரில் மட்டுமே உள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் இந்த வகையான சாலைகள் 38 இடங்களில் அமைக்க உள்ளோம். இது இந்தியாவில் முதல் முறையாகும் என தெரிவித்தார். 

10ஆயிரம் மருத்துவ முகாம்

இதனை தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீடு காரணமாக மருத்துவ இடங்கள் பறிபோவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பரவுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  மழைக்காலத்தில் வரும் நோய் பாதிப்புகள் மலேரியா, டெங்கு தவிர்க்க முடியாத ஒன்று. தமிழ் நாட்டை பொருத்த வரையில் டெங்கு காய்ச்சலை மிக சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10 மாதங்களில் இதுவரை 5600 க்கும் மேற்பட்டோர் டெங்குவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதிப்பானது வரும் காலங்களில் அதிகரிக்கும். டெங்கு பாதிப்பால் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இறப்பு ஏற்படுகிறது. வருகிற அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி அடுத்து வரும் பத்து வாரங்களில் தமிழகத்தில் 10,000  மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.  தமிழக மருத்துவ வரலாற்றில் இதுவே முதல் முறை என குறிப்பிட்டார். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவ முகாம்களை பயன்படுத்தி  கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அமைச்சர்களுக்கான சொகுசு இல்லங்கள் அறிவாலய அறக்கட்டளையில் வாங்கப்பட்டதா? உழைத்து சம்பாதித்ததா? சீறும் வானதி

click me!