தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு திடீர் இருதய பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சருக்கு உடல்நிலை பாதிப்பு
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்தமிழகத்தில் தி.மு.க.வின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக வலம் வரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தமிழக அமைச்சரவையில் மிகவும் முக்கியமானவராக உள்ளார். இதுவரை 9 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஆறுமுறை அமைச்சராக இருந்துள்ளார். இந்திநலையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து அவசரமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருதய பரிசோதனை
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருதய பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வேறொரு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டு அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருதயத் தொடர்பான பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அமைச்சர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்