அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதியால் தொண்டர்கள் அதிர்ச்சி!

By vinoth kumar  |  First Published Jul 31, 2024, 6:24 AM IST

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், துறைசார் அலுவல்களிலும் ஓய்வு இல்லாமல் பங்கேற்று வந்தார். 


அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், துறைசார் அலுவல்களிலும் ஓய்வு இல்லாமல் பங்கேற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: அவங்கள சும்மா விட்டுடாதீங்க! எச்.ராஜா காலில் விழுந்து கதறி அழுத கொலை செய்யப்பட்ட செல்வகுமாரின் குடும்பத்தினர்!

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இப்படியே போச்சுனா! இளைஞர்களை சீரழித்தது திமுக தான்! வரலாற்றின் கருப்பு பக்கங்களில் பதிவாகும்!அன்புமணி வார்னிங்

அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!