துரைமுருகனுக்கு என்ன ஆச்சு.! மருத்துவமனையில் திடீர் அனுமதி- காரணம் என்ன.?

Published : Jun 06, 2025, 08:26 PM ISTUpdated : Jun 06, 2025, 08:29 PM IST
duraimurugan

சுருக்கம்

தமிழக அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். 

அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நிலை பாதிப்பு : தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர் துரைமுருகன்,  கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குரோம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பகல் 12:30 மணிக்கு கால் வலி, காய்ச்சல் சளி காரணமாக மருத்துவ சோதனைக்கு வந்தார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தினர்

துரைமுருகனுக்கு காய்ச்சல், சளி- மருத்துவமனையில் அனுமதி 

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு காய்ச்சல் குறைந்ததால் தொடர்ந்து சளி தொல்லை மட்டும் இருப்பதன் காரணமாக மூன்று நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து இரவு 7.15 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு புறப்பட்டார் வீட்டில் அவர் ஓய்வெடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

வீடு திரும்பிய துரைமுருகன்

துரைமுருகனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் உடல்நிலை தொடர்பாக கேட்டறிந்தார். இதனிடையே துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக மருத்துவமனை எந்தவித தகவலையும் வெளியிடவில்லை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி