
சிதம்பரம் - சீர்காழி புறவழிச் சாலையில் திண்டிவனத்தில் இருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு, காரைக்காலுக்கு சென்ற லாரி ஒன்று நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் சேலத்தில் இருந்து டைல்ஸ் மற்றும் கிரானைட் ஏற்றிக் கொண்ட சீர்காழி நோக்கி சென்றுக்கொண்டிருந்த மினி லாரி, இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் எதிர்பாரதவிதமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் படிக்க: TASMAC : குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.! டாஸ்மாக் இன்று விடுமுறை.. வெளியான அதிர்ச்சி தகவல்
இதில் மினி லாரி முன் பகுதி அப்பளம் போல் முற்றிலுமாக நொறுங்கியது. இந்த கோர விபத்தில் மினிலாரி ஓட்டுனர் நகுலேஸ்வரன், மினி லாரியின் முன்னால் அமர்ந்திருந்த செல்வக்குமார் என்பவரும், அவரது மைத்துனி கற்பகவள்ளி, செல்வக்குமாரின் 3 வயது குழந்தை மிதுன் உள்ளிட்ட 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மினி லாரியில் பின் பகுதியில் இருந்து வந்த 4 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, விபத்து குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த அண்ணாமலை நகர் போலீஸார் உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் தெரிவிக்கையில், மினி லாரி அதி வேகத்தில் வந்ததாலும் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் வாகன இயக்கியதாலும் விபத்து நடத்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் மரணம்.! சேலத்தில் பலத்த பாதுகாப்பு !