அடுத்த ஆண்டிற்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published May 25, 2022, 12:22 PM IST
Highlights

2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இன்று சென்னையில் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 - 10 ம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கபடும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் 12 ம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், வரும் கல்வியாண்டியில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும். அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும்.அதே போல், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2023 ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கப்படும். 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் அறிவிப்பு.. முழு விபரம்..

click me!