TASMAC : குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.! டாஸ்மாக் இன்று விடுமுறை.. வெளியான அதிர்ச்சி தகவல்

By Raghupati R  |  First Published May 25, 2022, 11:36 AM IST

TASMAC : டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உள்ளது தமிழக அரசு. இந்த செய்தி மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து உள்ளது.


காடுவெட்டி குரு :

வன்னியர் சங்க தலைவராக இருந்த ஜெ.குரு என்கிற காடுவெட்டி குருநாதன் கடந்த 2018 மே 25-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பாமக சார்பில் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் ரூ.2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஜெ.குருவின் நினைவு தினத்தன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் காடுவெட்டிக்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

Tap to resize

Latest Videos

டாஸ்மாக் கடைகள் :

அந்த வகையில், இன்று(மே 25) அரியலூர் மாவட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.

அதில், ‘முன்னாள் வன்னியர் சங்க தலைவரான குருநாதன் என்கிற காடுவெட்டி குரு என்பவரின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு இன்று  (25ஆம் தேதி) வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் மீன்சுருட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அவரது நினைவு இடமான காடுவெட்டியில் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்த உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இணைப்பில் கண்டுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்..? வெளியே கசிந்த தகவல்.! வேட்பாளர்கள் இவர்களா ?

இதையும் படிங்க : TN RTE Admission 2022-23 : முக்கிய செய்தி! தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.. இன்றுடன் முடிவு.

click me!