"பாலில் ரசாயனம் கலக்கப்படவில்லை" - ராஜேந்திர பாலாஜியின் குற்றசாட்டுக்கு தனியார் பால் நிறுவனம் மறுப்பு

Asianet News Tamil  
Published : May 25, 2017, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
"பாலில் ரசாயனம் கலக்கப்படவில்லை" - ராஜேந்திர பாலாஜியின் குற்றசாட்டுக்கு தனியார் பால் நிறுவனம் மறுப்பு

சுருக்கம்

milk association condemns rajendra balaji

பாலில் ராசாயணம் எதுவும் கலக்கப்படவில்லை எனவும், தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன எனவும் தனியார் பால் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஆவின் பால் மட்டுமே தரமாக தயாரிக்கபடுவதாகவும், தனியார் பாலில் ரசாயனம் கலக்கபடுவதாவும் குற்றம் சாட்டினார்.

பால் கெடாமல் இருக்க தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், தனியார் பால் மூலம் குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழ் தொலைகாட்சி ஒன்று அவரிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்ட்கபட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கூறியதாவது:

பிரிட்ஜில் இருந்து பால் வெளியே எடுத்தால் 5 மணி நேரத்திற்குள் பால் கெட வேண்டும். இல்லையென்றால் பாலில் ரசாயனம் கலந்திருப்பது உறுதி என குறிபிட்டார்.

ஆவின் பால் விற்பனை, பால் கொள்முதல் ஆகியவை உயர்ந்திருக்கிறது.

தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் புனேவிற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. 10 நாட்கள் ஆகியும் கெடாத பால் தூய்மையான பால் கிடையாது. ஆதாரம் கிடைத்தவுடன் பால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், பாலில் ரசாயனம் கலக்கபடுவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக ஆரோக்கியா பால் இயக்குனர் சத்தியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறுகையில், பால், மற்றும் பால் பொருட்களில் ரசாயனம் கலக்கபடவில்லை. ஆதரமற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன என தெரிவித்தார். 

மேலும், 47 ஆண்டுகளாக பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளோம் எனவும், இடைத்தரகர்களிடம் பால் கொள்முதல் செய்வதில்லை எனவும், தெரிவித்தார்.

நாட்டிலுள்ள மிகச்சிறந்த பால் நிறுவனங்களில் ஆரோக்கியாவும் ஒன்று எனவும், ஆரோக்கியா பாலில் எந்த ரசாயனமும் கலக்கப்படவில்லை என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மழை குறித்து வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!
ஓய்வூதியத் திட்டம்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றியது அம்பலம்.. சொல்வது யார் தெரியுமா?