ஆவின் பச்சை பால் பாக்கெட் விலையை மறைமுகமாக உயர்த்திய தமிழக அரசு..! ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் பால் முகவர்கள்

Published : Feb 01, 2023, 10:06 AM IST
ஆவின் பச்சை பால் பாக்கெட் விலையை மறைமுகமாக உயர்த்திய தமிழக அரசு..! ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் பால் முகவர்கள்

சுருக்கம்

ஆவின் பச்சை பால் பாக்கெட்டில் கொழுப்பு சத்து அளவை 1% குறைத்து, அதாவது கொழுப்பு சத்து 3.5%, திடசத்து 8.5% என சத்துக்களின் அளவை குறைத்து, விற்பனை விலையை குறைக்காமல், அதே விற்பனை விலையில் விறக்கப்பட்டு வருவதாக பால்முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஆவின் பால் விலை உயர்வு

திமுக ஆட்சி அமைந்து கடந்த 20 மாதங்களில் ஆவின் பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகிறது. ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலையையும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்தநிலையில் ஆவின் பச்சை பால் பாக்கெட்டில் உள்ள கொழுப்பு சத்தை குறைத்துள்ள நிலையில், பாலின் விலையை குறைக்காமல் அதே விலையில் விநோயகம் செய்யப்பட்டு வருவதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பாலான பச்சை நிற பால் பாக்கெட்டில் கொழுப்பு சத்து 4.5%, திடசத்து 8.5% என இருந்ததை நிர்வாக காரணங்களுக்காக என்று கூறி இன்று (01.02.2023) முதல்

கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தால்______இருக்காது.! சீமானுக்கு எச்சரிக்கை விடும் திமுக எம்எல்ஏ

லிட்டருக்கு ரூ.3 உயர்வா.?

கொழுப்பு சத்து அளவை 1% குறைத்து, அதாவது கொழுப்பு சத்து 3.5%, திடசத்து 8.5% என சத்துக்களின் அளவை குறைத்து, விற்பனை விலையை குறைக்காமல், அதே விற்பனை விலையில் (500ML 22.00),  பச்சை நிற பாக்கெட்டில் "Cow Milk" என்கிற பெயரில் மக்களை ஏமாற்றும் செயலை கோவை மாவட்ட ஆவின் முன்னெடுத்துள்ளதையும், மக்கள் தலையில் மறைமுகமாக லிட்டருக்கு 3.00ரூபாய் விலை உயர்வை திணித்திருப்பதையும் (குறைக்கப்பட்ட கொழுப்பு சத்து அடிப்படையில் 1 Total Solids ரூபாய் 2.91ஆகும்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கொழுப்பு சத்து அளவு குறைப்பு

தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறுவதையும், தங்களை கட்டுப்படுத்த எவரும் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பால் பாக்கெட்டுகளை வகை, வகையாக உற்பத்தி செய்து அதில் கொழுப்பு சத்து, திடசத்து அளவுகளையும், பாக்கெட்டில் உள்ள பால், தயிரின் அளவுகளையும் குறைத்து, விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்தி வரும் நிலையில் தனியார் பால் நிறுவனங்களே செய்யும் போது மாநில அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான நாமும் செய்தால் என்ன தவறு..? நம்மை கேள்வி கேட்பார் யார் இருக்கிறார்கள்..? என்கிற மமதையோடு செயல்பட தொடங்கியிருக்கும் ஆவினின் மக்கள் விரோத போக்கு ஏற்புடையதல்ல.

படு பாதாளத்தில் ஆவின்

ஏற்கனவே கடந்த ஆட்சியோடு ஒப்பிடுகையில் தற்போது பால் கொள்முதல் தினசரி 10லட்சம் லிட்டருக்கும் மேல் குறைந்து ஆவினுக்கான பால் வரத்து கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் சூழலில் தற்போதைய செயல்பாடுகள் ஆவின் பால் விற்பனையை படுபாதாளத்தில் தள்ளி விடும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்தில் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்வதாக பொன்னுசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர் தென்னரசு- இபிஎஸ் அறிவிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!