இவர்களிடம் கடைசி வரை இருந்தது இது மட்டுமே - வெள்ளி தொப்பி, கருப்பு கண்ணாடி – பச்சை நிற புடவை, வைரக் கம்மல்

First Published Dec 7, 2016, 12:36 PM IST
Highlights


தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும்போதே மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரிடம் வெள்ளை தொப்பு, கருப்பு கண்ணாடியையும், ஜெயலலிதா பச்சை நிற புடவை, வைரக் கம்மலை மட்டுமே இருந்த்து.

அரசியல் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நகைகள் அணிவதை முற்றிலுமாக முதல்வர் ஜெயலலிதா நிறுத்திவினார். பின்னர், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தபோது, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வற்புறுத்தலுக்காக வைர கம்மல் மட்டும் அணிந்தார்.

அதே வேளையில், முதல்வர் ஜெயலலிவுக்கு பச்சை நிறம் பிடித்தமானது. அவர் முக்கிய விழாக்களுக்கு செல்லும்போது பச்சை நிற சேலையை அணிந்து செல்வார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.

அப்போது, ஜெயலலிதா பச்சை நிற சேலை அணிந்திருந்தார். ஒரு டாலர் செயின், விரலில் மோதிரம், கையில் கருப்பு நிற கைக்கடிகாரம், வளையல், வைரக் கம்மல் மட்டுமே இருந்தது.

இதேபோல் கடந்த 1987ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைந்தபோது வெள்ளை வேட்டி, சட்டை, வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணடி, கை கடிகாரம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!