மருத்துவ கண்காணிப்பில் ஓ.பி.எஸ்.. உடல்நிலை தற்போது எப்படி இருக்கு..? வெளியான மருத்துவமனை அறிக்கை

Published : Jul 16, 2022, 04:06 PM IST
மருத்துவ கண்காணிப்பில் ஓ.பி.எஸ்.. உடல்நிலை தற்போது எப்படி இருக்கு..? வெளியான மருத்துவமனை அறிக்கை

சுருக்கம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், லேசான கொரோனா தொற்று அறிகுறி காரணமாக எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” லேசான கொரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஓபிஎஸ் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்பரூவமெடுத்தது. நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் உள்ளிட்ட 18 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

மேலும் படிக்க:ஓ.பி.எஸ் உடல்நிலை எப்படி இருக்கு..? - வெளியான மருத்துவமனை அறிக்கை

இந்நிலையில் சட்ட ரீதியாக போராடி நீதிப்பெறுவோம் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.இதனால் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். மேலும் சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமாஅ வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த சில நாட்களாகவே உடல் சோர்வாக காணப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.தொடர்ந்து ஓரிரு தினங்களில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், லேசான கொரோனா அறிகுறி மட்டும் இருப்பது தெரியவந்தது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஓபிஎஸ் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் ஓபிஎஸ் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க:ஓபிஎஸ் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதியா? வெளியானது டெஸ்ட் ரிப்போர்ட்..!

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் லேசான கொரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஓபிஎஸ் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்