மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; நீர்வரத்தும் பல மடங்கு அதிகரிப்பு...

 
Published : May 29, 2018, 06:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; நீர்வரத்தும் பல மடங்கு அதிகரிப்பு...

சுருக்கம்

Mettur dam water level increases day by day Water turnover is several times more ...

சேலம் 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருவதால் நீர்வரத்து பல மடங்காக அதிகரித்து வருகிறது. இதற்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதே  காரணம். 

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இன்னும் இரண்டு தினங்களில் தொடங்கப் போகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை கைக்கொடுப்பதில்லை. இதற்கு மாறாக கர்நாடக மற்றும் கேரளாவில் மழை தீவிரம் அடைகிறது. 

கர்நாடகத்தில் பெய்த தொடர் மழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்பட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்ட இருக்கின்றன. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர்வரத்தை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடுகின்றனர்.

இவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் தமிழகம் - கர்நாடக எல்லைப்பகுதியான பில்லிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் தமிழகத்தில் பருவமழை தவறிய நிலையிலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அணைக்கு வினாடிக்கு 500 கனஅடிக்கு கீழ் வந்துகொண்டிருந்த நீர்வரத்து கோடை மழையின் காரணமாக படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.

நேற்றைய காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4424 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. 

இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.  

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!