மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.. என்ன காரணம் தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Sep 5, 2022, 12:01 PM IST
Highlights

கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 

கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே பாறைகள் உருண்டு விழுந்து, மணசரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில்வே உழியர்கள் ரயில் பாதை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

மேலும் படிக்க: வேலூர் டூ சென்னை பறந்த இதயம்.. 10 நிமிடத்தில் மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்.. வீடியோ உள்ளே

click me!