நேரு பூங்கா - திருமங்கலம் மெட்ரோ ரயில் சேவை - 50 ரூபாயில் அட்டகாச பயணம்..!!

 
Published : May 14, 2017, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
நேரு பூங்கா - திருமங்கலம் மெட்ரோ ரயில் சேவை  - 50 ரூபாயில் அட்டகாச பயணம்..!!

சுருக்கம்

metro train journey in 50 rs

சென்னை திருமங்கலம் முதல் எழும்பூர் அருகே நேரு பூங்கா வரை மெட்ரோ ரயில் சேவை இன்ற தொடங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பின்னர், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, கொடியசைத்து, ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார் உள்பட பலர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

இந்த ரயில் சேவை முழுவதும் நேரு பூங்கா முதல் சென்னை விமான் நிலையம் வரை 17 கி.மீ. தூரத்துக்கு ரூ.60 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.50 வரையும், சிறப்பு வகுப்புக்கான கட்டணம் ரூ.20 முதல் ரூ.100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2012ல் இந்த மெட்ரோ ரயில் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 3வது ரயில் சேவைப் பாதை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையேயும் சின்னமலை - விமான நிலைய மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன.

மெட்ரோ ரயில் செல்லும் பாதையில், 250 மீட்டர் இடைவெளி அவசர வழி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் பாதையின் அருகில், அவசர நடைபாதையும், காற்று வசதிக்கு 8 ராடசத மின் விசிறியும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே சூரிய ஒளி வசதி செய்யப்பட்டு, யூபிஎஸ் ஜெனரேட்டர் மூலம் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல பள்ளி மாணவியிடம் ஆசிரியர்! மூடி மறைக்க துணை நடிகர் வீட்டில் ரூ.10 லட்சம் பேரம்! வெளியான பகீர்
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! தமிழ்நாடு அரசு சொன்ன குட்நியூஸ்!