19 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை- வானிலை மையம் தகவல்

By Ajmal KhanFirst Published Dec 25, 2022, 8:09 AM IST
Highlights

இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரையில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இறுதி கட்டத்தில் வடகிழக்கு பருவமழை

வட கிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கை கடற்கரைப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று  காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (26ஆம் தேதி) காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிக்கு நகரக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை கடந்த சில நாட்களாக பனியின் தாக்கமே அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சி உலக சாதனையாக அங்கீகரிப்பு

19 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவன்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, நெல்லை ஆகிய 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய  வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

click me!