தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு வழக்கின் முக்கிய அம்சம்!

By Dinesh TGFirst Published Dec 24, 2022, 12:47 PM IST
Highlights

15-10-2022 அன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது. இதன் மூலம் இந்த கடுமையான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) NH 5 - NH 16-க்கு சொந்தமான நிலம் / நடைபாதை மற்றும் CMWSSB இன் கழிவுநீர் அமைப்பு சட்டத்திற்குப் புறம்பாக துரித உணவுக் கடைகளுக்காகவும் மற்றவற்றிற்காகவும் சிலர் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளால், சாலையின் அகலம் குறைந்து, வழக்கமான போக்குவரத்து தடைப்பட்டு வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி நேறும் வாகன விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது.

இந்த ஆக்கிமிப்புகள் தொடர்பாக, எண்.207, ஜிஎன்டி ரோடு, கிழக்கு காவாங்கரை, புழல், சென்னை - 600066 இந்த இடங்களில் அமைந்துள்ள சாலையின் முன்புறம் உள்ள நடைபாதை மற்றும் பாதாள சாக்கடை அமைப்பின் மீது அனுமதியின்றி ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். புகாரளித்த பின்னரும் காவல்துறை மற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வழிப்போக்கர்கள்/பொதுமக்கள் மனவேதனையையும், தாளாத துயரமும் அடைந்துள்ளனர். வாகன விபத்துகளுக்கு ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம் எனவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன



மேற்கூறியவற்றைத் தவிர, ஆக்கிரமிப்பாளர்கள் பொது மக்கள் அணுகக்கூடிய இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர் அவைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதன் காரணமாகவே ஏராளமான வாகன விபத்துகள் ஏற்படுவதாக மனுதாரரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுதாரரும், வழக்கறிஞருமான என்.கோகுல ராவ் என், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார். பின்னர், நீதிமன்றம் வாயிலாக புதிய ஆக்கிரமிப்புகளைத் தடுக்க காவல்துறைக்கு பல நோட்டீஸ்களை அனுப்பினார். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் மின்னல் வேகத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை கட்டியதால் மீட்பு நடவடிக்கைகள் வீணானது. மீண்டும் தொடர்ந்து என்.கோகுல ராவ், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைகள் போன்ற பிற அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி நோட்டீஸ் அனுப்பி தொடர்ந்து போராடி வந்தார். ஆனால் அதற்கு பதிலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



பின்னர் என்.கோகுல ராவ், வேறு வழியின்றி கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற இரட்டை பெஞ்ச் முன்பு வழக்குப் பதிவு செய்து வாதிட்டார். அதன் மூலம் பெஞ்ச் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. மனுதாரர் அளித்த முதற்கட்டப் புகாருக்கு முறையாகப் பதிலளித்து, காவல் உதவி ஆணையரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகலைப் பெற்ற நாளிலிருந்து 12 வார காலத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆக்கிரமிப்பாளர்களின் செல்வாக்கு உள்ளாட்சியில் இருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புக்கும் நிதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்டர் விவரங்கள் கீழே உள்ளன

தேதி: 02.08.2021
CORAM:
மாண்புமிகு திரு.நீதிபதி என்.கிருபாகரன் மற்றும்
மாண்புமிகு திருமதி.நீதிபதி T.V.தமிழ்செல்வி W.P. 2021 இன் எண். 10299

நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கவில்லை என்று கூறியதால், வழக்கறிஞர் என்.கோகுல ராவ், மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதற்கிடையில், அரசு அதிகாரிகள் சென்று ஆக்கிரமிப்புகளை ஓரளவு அகற்றி, சிலவற்றை அதிக செல்வாக்கு பெற்றிருந்ததால் விட்டுவிட்டனர் என தெரிவித்திருந்தார். ஆனால் என்.கோகுல ராவ், இந்த விஷயத்தை ஒருபோதும் விடுவதாக இல்லை. மீண்டும் நீதிமன்ற படியேறிச் சென்று வாதிட்டு, ஆக்கிரமிப்பு பகுதிகளின் நிலையை விளக்கினார், பின்னர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து, மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உத்தரவுகளை நிறைவேற்றச் சொன்னது. எந்த விதமான தயவு தாட்சண்யத்தையும் காட்டாமல் அடுத்த விசாரணை தேதியில் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று 15-10-2022 அன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது. இதன் மூலம் இந்த கடுமையான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

click me!