
கிராமத்து வீராங்கனைக்கு சைக்கிள்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி, இவருக்கு சைக்கிள் மீது சிறுவயதில் இருந்து ஆர்வமுடன் இருந்து வந்தார். இதன் காரணமாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்தநிலையிலை தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி வெற்றி பெற்ற நிலையில், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க சைக்கிள் வேண்டும் என முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீமதி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு கனிமொழி சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். கனிமொழி கொடுத்த சைக்கிள் மூலம் தேசிய அளவிலான பல போட்டியிகளில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் குழு போட்டியில் தங்கமும், , தனிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியிலும் கலந்துகொண்டு 3-ஆம் இடத்தை பிடித்திருந்தார்.
ரூ.14 லட்சத்திற்கு சைக்கிள்
இந்தநிலையில், தற்போது இஸ்ரேலில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் "உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்" போட்டியில் பங்கேற்பதற்கான சிறப்பு சைக்கிளை தனக்கு வழங்க வேண்டும் என கனிமொழி கேட்டுக்கொண்டிருந்தார். இதனை ஏற்ற கனிமொழி தற்போது 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனித்துவமான சைக்கிளை இந்தியாவில் ஓட்டும் முதல் வீராங்கனை என்ற பெயரையும் ஶ்ரீமதி பெற்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மூன்றாண்டுகளுக்கு முன் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி அவர்களுக்கு சைக்கிள் ஒன்றைப் பரிசளித்தேன்.
ஆடி மாசமே வரல அதுக்குள்ள கூரை பறக்குது.. அரசு பேருந்தின் அவல நிலை.. தலையில் அடித்துக் கொண்ட மக்கள்
வாழ்த்து தெரிவித்த கனிமொழி
அதில் அவர் குழுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும்,தனிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதோடுகடந்த ஜூனில் ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழுப் போட்டியிலும் 3-ஆம் இடத்தைப் பெற்றார். தொடர் சாதனை நிகழ்த்தி வரும் ஸ்ரீமதியை இன்று நேரில் சந்தித்து அவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு உகந்த சைக்கிள் ஒன்றைப் பரிசளித்தாக தெரிவித்துள்ளார். கிராம்ப்பகுதியை சேர்ந்த வீராங்கனை சர்வதேச போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் கனிமொழி பரிசளித்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடையவைத்துள்ளது.
இதையும் படியுங்கள்