ஆடி மாசமே வரல அதுக்குள்ள கூரை பறக்குது.. அரசு பேருந்தின் அவல நிலை.. தலையில் அடித்துக் கொண்ட மக்கள்

By Ajmal Khan  |  First Published Jul 6, 2022, 1:52 PM IST

மதுரையில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் மேல் கூரை பிய்த்து கொண்டு காற்றில்  பறந்த நிகழ்வு பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


காற்றில் பறந்த பேருந்தில் மேற் கூரை

பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பைக், கார்களை இயக்கி கொண்டு பணிக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். வாங்குகிற சம்பளத்தில் பெரும் பகுதி பெட்ரோல், டீசலுக்கு செலவிட நேரிடுவதால் பொது போக்குவரத்தை பெரும்பாலானோர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி அரசு பேருந்துகளில் செல்லலாம் என்றால் உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறதோ என்று அச்சப்படும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். அந்தவகையில்,  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் நோக்கி அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, திருப்பரங்குன்றத்தை அடுத்த மூலக்கரை அருகே வரும் பொழுது, பேருந்தின் மேற்புறம் ஒட்டப்பட்டுள்ள எஃப் ஆர் பி என, அழைக்கப்படும்  தார்ப்பாயானது பிரிந்து காற்றில் பறக்க தொடங்கியது. பேருந்து மேல்புறம் வெறும் கம்பிகள் மட்டுமே இருந்தது. பயணிகள் அமர்ந்திருக்கும் ஜன்னல் ஓரம் பஸ்சின் மேல் கூரைவந்து விழுந்தது. இதனால் ,அதிர்ந்து போன பயணிகள் பேருந்து நிறுத்த சொல்லி கூச்சலிட்டனர்.

Tap to resize

Latest Videos

உடனே முந்துங்கள்!! ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..

மாணவர்களே கவனத்திற்கு.. மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் உத்தரவு

அலறி ஓடிய பயணிகள்

 இதனையடுத்து பேருந்தை ஓரமாக பேருந்து நிறுத்திய ஓட்டுனர் கீழே இறங்கி பார்த்தபொழுது, மேலே ஒட்டப்பட்டு இருந்த தார்ப்பாய் காற்றின் வேகம் தாங்க முடியாமல் பிரிந்து தொங்கியது தெரிய வந்தது.   இதனையடுத்து பேருந்தில் பயணித்த பயணிகளை மாற்று பேருந்து மூலமாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அனுப்பி வைத்தனர். ஆடி காற்றே ஆரம்பிக்காத  நிலையில், ஆரம்பத்திலேயே சிறு காற்றுக்கே பேருந்து மீது ஒட்டப்பட்டுள்ள  தார்ப்பாயானது பிரிந்து விழுகிறது .மேலே உள்ள இதே தார்ப்பாய் ஆனது பேருந்து ஓட்டுநர் கண்ணாடி  விழுந்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். இது போன்று இனி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க, அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படியுங்கள்

மக்களே உஷார்... கைமீறிப் போகும் கொரோனா , தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? அமைச்சர் எச்சரிக்கை.

 

click me!