மேகதாதுவில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
மேகதாதுவில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.இதுக்குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை தொடர்பான் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 2022-2023 பட்ஜெட்டில் மேகதாது அருகே காவிரிக்கு குறுக்கே அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.05.02.2017 அன்று நடுவர் மன்ற அளித்த தீர்ப்பையும், 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தனிச்சையாக காவிரி நதியில் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இசைவை பெறாமலும் எவ்வித ஒப்புதல் பெறாமலும் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
undefined
இந்த அறிவிப்பு வருகின்ற கர்நாடக அரசின் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எனவே எப்படி இருப்பினும், தமிழக அரசு, தமிழக விவசாயிகளின் நலன் கருதி கர்நாடக அரசின் மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 ரெடி.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு !!
ஏனினும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணைக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழக அரசு சார்பிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில சட்டமன்றத்தில் இன்று மாநில அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மத்திய அரசிடம் தேவையான அனைத்து அனுமதியும் பெற்று மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் இச்செயல் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேகதாது அணை திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய நீர்வள ஆணையத்தில் கடந்த ஆண்டில் தாக்கல் செய்தபோதே தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக இந்த அணை கட்டப்போவதாக கர்நாடக அரசு அறிவித்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை ஒருக்காலும் விட்டுத்தர முடியாத எனவும் மனிதநேய மக்கள் கட்சி தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு.. இன்று பரபரப்பு தீர்ப்பு..!