குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 ரெடி.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு !!

By Raghupati R  |  First Published Mar 5, 2022, 9:23 AM IST

இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


தமிழகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 130-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மிக முக்கியமானது,  ’குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்’. திமுக ஆட்சிக்கு வந்ததுமே மக்கள் எதிர்பார்த்த முதல்வரின் கையெழுத்து,  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்திற்கான கையெழுத்து தான்.  

Tap to resize

Latest Videos

undefined

இன்று வரைக்கும் அது நிறைவேற்றப்படாமல் இருப்பதால் பெண்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். திமுக ஆட்சி அமைந்து, சுமார் 9 மாதங்கள் ஆன நிலையில், அந்த திட்டம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இதை அதிமுக - பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

click me!