
அது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது அடுத்த 48 மணிநேரத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மேலும், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில், தமிழக கடற்கரையோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரி பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 55-65 கிமீ வேகத்தில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசும்.
மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் உடனே கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.7ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.