அதிகரிக்கும் கொரோனா தொற்று... நீட்டிக்கப்படுமா லாக்டவுன்..? தமிழக அரசு ஆலோசனை…

By Raghupati R  |  First Published Jan 9, 2022, 11:04 AM IST

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.


தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய கட்டுபாடு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் வைரஸ் பரவல் குறையாததால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. அதன்படி  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தவுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் விடுமுறை முடிந்து திரும்பி வரவுள்ள நிலையில்,அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்து குறித்தும் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது.

மேலும்,குறைந்த பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்குவது குறித்த அறிவிப்புகள் நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,ஆலோசனைக்கு பிறகு மருத்துவத்துறை அதிகாரிகள் முதல்வரை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

click me!