மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! செமஸ்டர் தேர்வை ஒத்திவைத்த.. சென்னை பல்கலைக்கழகம் !!

By Raghupati RFirst Published Jan 9, 2022, 9:41 AM IST
Highlights

ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி  ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.அதாவது, ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்,கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதை தொடர்ந்து எக்காரணத்தைக் கொண்டும் இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஜனவரி 20 ஆம் தேதி வரை கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஜனவரி 21 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகளை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும்,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தேர்வை எப்போது நடத்தலாம்? என்பது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

click me!