ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் !! தமிழக அரசு அதிரடி உத்தரவு... என்னவா இருக்கும் ?

Published : Jan 09, 2022, 08:32 AM IST
ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் !! தமிழக அரசு அதிரடி உத்தரவு... என்னவா இருக்கும் ?

சுருக்கம்

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிிவித்து உள்ளதாவது, ‘ கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றை உரிய முறையில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும். 

அதன்படி போதுமான இடமின்றி இயங்கி வரும் 746 தனியார் பள்ளிகள் நிபுணர் குழு அறிவுரையின்படி தொடர்ந்து செயல்படலாம். எனினும், இட வசதிக்கேற்ப கூடுதல் மாணவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். இதுத விர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. 

முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த கமிட்டியிடம் தான் புகார் அளிக்க வேண்டும். பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போன்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை. 

இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பணியிட மாறுதல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 08 December 2025: 3500 ஆண்டுகள் பழமை.. காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்