மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

Asianet News Tamil  
Published : Jun 24, 2017, 10:26 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

சுருக்கம்

Medical counselling starts on july 17

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் கடந்த மாதம்  7 ஆம்தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுநடைபெற்றது. 

இதில் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானமாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்தச் சூழலில் நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ரேங்க் பட்டியல் வெளியாகவில்லை.

இதற்கிடையே மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி  தொடங்கி ஜூலை 7 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 22 எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 8 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்ற பின் ஜூலை 17 ஆம் தேதி மருத்தவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது

PREV
click me!

Recommended Stories

அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்.. தீய சக்தி; ஊழல் சக்தி வர விடமாட்டேன்.. விஜய் சூளுரை!
அதிமுக, பாஜக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது ! திருமாவளவன் பேட்டி