நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ பரிசோதனை... மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்...!

By vinoth kumarFirst Published Oct 9, 2018, 1:21 PM IST
Highlights

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனைக்காக காவல் நிலையத்திலிருந்து திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனைக்காக சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்திலிருந்து திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

முன்னதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் துணை பேராசிரியரான நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழியில் செல்வதற்கு கட்டாயப்படுத்திய வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. 

அந்த செய்தியில், ஆளுநரை தான் 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த செய்தி குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு வந்த 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார், அவரை விமான நிலையத்தில் வைத்தே அதிரடியாக கைது செய்தனர்.

 

பிறகு ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக காவல் நிலையத்திலிருந்து திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். பிறகு மாலைக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!