15 வருடத்தில் 4 திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! சோஷியல் மீடியா மூலம் சிக்கியது எப்படி?

Published : Jan 27, 2025, 06:45 PM ISTUpdated : Jan 27, 2025, 08:31 PM IST
15 வருடத்தில் 4 திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! சோஷியல் மீடியா மூலம் சிக்கியது எப்படி?

சுருக்கம்

 மயிலாடுதுறையில் மருத்துவர் எனக் கூறி பலரைத் திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு முறை திருமணம் செய்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானதால் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் குளங்கரை தெருவைச் சேர்ந்தவர் சிவசந்திரன் (30). இவர் தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் பணியில் இருக்கிறார். சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

சிவசந்திரன் அவ்வப்போது அம்மாவைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்று வந்தார். அப்போது, நிஷாந்தி (29) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் அதே மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்ப்பதாகக் கூறி அறிமுகம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, கடந்த ஜனவரி 20ஆம் தேதி சீர்காழியில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும், சீர்காழி அருகே உள்ள புத்தூர் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்த நெப்போலியன் (34) என்பவர் நிஷாந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 2017ஆம் ஆண்டு மீரா என்ற பெயரில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.  திருமணத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து வசித்து வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு திடீரென தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் எனவும் பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஆபிஸ் செல்லும் பெண்களுக்கு அசத்தும் 5 புரொபஷனல் புடவைகள்!

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் தனது மனைவி இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்ட படங்களைப் பார்த்த நெப்போலியன், சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மகளிர் காவல்துறையினர் லட்சுமி என்ற நிஷாந்தியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

யார் இந்த லட்சுமி?

லட்சுமி கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சேர்ந்தவர். இவர் பழையார் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் பிறந்துள்ளனர். இந்நிலையில், கணவர் இறந்துபோனதால், பெண் குழந்தையை கணவரின் அண்ணன் ஜெயக்குமார் வீட்டில் விட்டுவிட்டு ஆண் குழந்தையுடன் தன் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

பிறகு தன் பெயரை மீரா என்று மாற்றிக்கொண்டு நெப்போலியனை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். பிறகு அவரைக் கைவிட்டு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். சிறிது காலத்திற்குப் பிறகு, கோவைக்கு பணி மாறுதல் என்று சொல்லி தலைமறைவாகிவிட்டார். அப்போது, ஈரோட்டில் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த லட்சுமி, அரசு வேலையில் இருப்பதாகவும் மருத்துவராக இருப்பதாகவும் கூறி வெவ்வேறு பெயர்களில் பலரை திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார். சீர்காழி மகளிர் காவல்துறையினர் லட்சுமியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

தினமும் 100 ரூபாய் சேமித்தால் சொளையா 2 லட்சம் கிடைக்கும்! சூப்பர் திட்டம் இதோ!

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!
எமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி