அமைச்சர் உதயநிதிக்கு எதிரான 3 ரிட் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

Published : Jan 27, 2025, 04:53 PM ISTUpdated : Jan 27, 2025, 04:55 PM IST
அமைச்சர் உதயநிதிக்கு எதிரான 3 ரிட் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

சுருக்கம்

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட 3 ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட 3 ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவைப் போல ஒழிக்கவேண்டும் என்று பேசினார். இது நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியது. அவர் மீது பல்வேறு வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்மம் தொடர்பான பேச்சை எதிர்த்து வழக்கறிஞர் பி. ஜெகநாத் உள்ளிட்ட மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க மனுதாரர்கள் கோரினர். மேலும், அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

வாட்ஸ்அப் குரூப்பில் சேர்ந்தவுடன் 90 லட்சம் அபேஸ்! முதலீட்டாளர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்!

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, முன்னதாகவே நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இன்று இந்த வழக்கு நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​அரசு தரப்பில் ஆஜரான திரு. முகில் ரோட்டகி, ரிட் மனுக்கள் முகாந்திரமற்றவை என்று வாதிட்டார். உதயநிதி ஸ்டாலினின் சார்பாக திரு. பி. வில்சன் ஆஜராகி மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றார்.

சிறிது நேரம் வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட பிறகு, நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர், பிரிவு 32இன் கீழ் ரிட் மனுவை ஏற்க முடியாது என்று கூறி, அதனைத் தள்ளுபடி செய்ய முடிவு செய்தனர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் திரு. தாமா சேஷாத்ரி நாயுடு நீதிமன்றத்தின் முடிவை ஏற்று, இவ்விவகாரதிதல் சட்டப்படி தீர்வுகாணும் அனுமதியைக் கோரி, அனைத்து ரிட் மனுக்களையும் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் சட்டப்படி தீர்வு காண அனுமதி வழங்கி, ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. மேலும் அவரது பேச்சை சட்டவிரோதமானது என்ற அறிவிக்கக் கோரியதையும் நிராகரித்துள்ளது. இது உதயநிதி ஸ்டாலினுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுகவினர் கருதுகின்றனர்.

ஒரே நாடு ஒரே நேரம்! புதிய IST நேர விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
ஈரோட்டில் விஜய்! டிச.16ல் கொங்கு மண்டலம் குலுங்கப் போகுது! செங்ஸ் போட்ட பிளான்