சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொடூர கொலை! 19 போலீசார் மீது ஆக்ஷன்! எஸ்.பி. அதிரடி!

Published : Mar 10, 2025, 09:21 AM ISTUpdated : Mar 10, 2025, 09:40 AM IST
சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொடூர கொலை! 19 போலீசார் மீது ஆக்ஷன்!  எஸ்.பி. அதிரடி!

சுருக்கம்

மயிலாடுதுறை பெரம்பூரில் சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் இருவர் கொலை சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த 19 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அடுத்துள்ள முட்டம் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில்  ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய 3 பேர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாராய வியாபாரியான ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய வியாபாரிடம் போட்டுக் கொடுத்த காவல்துறையால் இரட்டை கொலை! உண்மையை மூடி மறைக்க முயற்சி! ராமதாஸ்!

இதனையடுத்து ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்தும் மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களான ஹரி சக்தி(20), ஹரிஷ்(25), அஜய்(19) ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கடந்த மாதம் 14ம் தேதி சாராய வியாபாரிகளான ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து ஹரிஷ், ஹரி சக்தி ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய வியாபாரிகளான ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அண்ணாமலை, டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தார். 

இதையும் படிங்க: சாராய விற்பனையை போலீசாரிடம் போட்டுக் கொடுத்த இளைஞர்களை போட்டுத் தள்ளிய பயங்கரம்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் பிரபாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது உதவி ஆய்வாளர்கள்  மணிமாறன், சங்கர் என பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 19 போலீசாரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இரட்டை கொலை வழக்கில் முறையாக விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து போலீசார் கூண்டோடு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!