குத்துச்சண்டையில் தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவி; தேடி சென்று வாழ்த்திய ஆட்சியர்

Published : Feb 13, 2023, 06:28 PM IST
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவி; தேடி சென்று வாழ்த்திய ஆட்சியர்

சுருக்கம்

மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவியை பள்ளிக்கு தேடி சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் செயலை மாணவிகள் வியந்து பார்த்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையத்தில் பாக்ஸிங் பிரிவில் பயிற்சி பெற்று வரும் மாணவி ரோஷினி. மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

இது தொடர்பாக கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று பள்ளி காலை வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரோஷினி மற்றும் மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது தான் தனது லட்சியம் என்று தெரிவித்தார். 

அப்போது மாவட்ட ஆட்சியர் மாணவிகளுக்கு லட்சியத்தை அடைவது எவ்வாறு என்பது குறித்து அறிவுரைகள் வழங்கினார். சைக்கிள் ஓட்டும் பொழுது நமது ஆழ் மனதில் பதிந்து விடுவதால் கால்களை மாறி மாறி பெடல் மிதிப்பது குறித்து அனிச்சை செயலாக நடைபெறும். அதுபோல் நாம் அடைய வேண்டிய லட்சியம் குறித்து தினம் தோறும் ஒரு பேப்பரில் 10 முறை எழுதி வைத்து அதை மீண்டும் மீண்டும் படித்து வந்தால் நமது ஆழ்மனதிற்கு அது சென்று இலட்சியத்தை நோக்கி நமது ஆழ்மனது வாய்ப்புகளை உருவாக்கி தரும். 

காவலர்கள் கண்முன்னே விஷமருந்தி விவசாயி பலி; கை கட்டி வேடிக்கை பார்த்த ஆய்வாளர்

இதுதான் வெற்றியின் ரகசியம் என்று மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மாணவியை தேடிச்சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; இனி குடிநீர் கேன் எடுத்துவர தடை

PREV
click me!

Recommended Stories

Firecracker Scam Alert: Online பட்டாசு மோசடி! சமத்தா இருந்து தப்பிச்சுக்கோங்க! அலர்ட் செய்த தமிழக அரசு!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!