
சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்ள 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு சிவன்கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20 வாகனங்கள் தீ பிடித்து எரிந்ததால் குடியிருப்பு முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது.
விபத்து குறித்து அறியாமல் முதல் தளத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மீனாட்சி, சஞ்சய், செந்தில்,சந்தியா ஆகியோர் மூச்சுத் திணறி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் 2 க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.
மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 5 பேர் மீட்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் இரு சக்கர வாகனத்தில் தீ பற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.