முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை... இன்று தொடங்குகிறது கலந்தாய்வு….

Asianet News Tamil  
Published : May 08, 2017, 07:11 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை...  இன்று தொடங்குகிறது கலந்தாய்வு….

சுருக்கம்

Medical counciling for doctors

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 80 சதவீதத்திற்கு மேல் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இக்கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று  மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.

இதனையடுத்து, மே 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும், மே 11ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு எம்.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதல்வர் ஸ்டாலினை தோல்வி சுனாமி சுத்தி சுத்தி வருகிறது ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
சாலையின் இரண்டு புறமும் திரண்ட பெண்கள்.! விஜய்யை காண திரண்ட இளசுகள்.!