
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டுகள் வைக்கப்படும் என ஐ.எஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
நாடு முழவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கு வெடி குண்டு வைக்கப்படும் என் ஐ.எஸ் தீவிரவாதிகள் பெயரில் ரயில்வே நிர்வாகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதில் வரும் ஜூன் முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் தொடர் குண்டு வெடிப்புகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் சந்தேகப்படும் நபர்கள் பற்றி ஆர்.பி.எப் மற்றும் ரயில்வே போலீசில் புகார் தெரிவிக்கலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.