தமிழகம் மற்றும் புதுவையில் மர்ம காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் கூட்டமானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே கோவையில் முக கவசம் கட்டாயம் படுத்திய நிலையில், தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
அதிகரிக்கும் காய்ச்சல்
கோடைகாலம் முடிவடைந்து மழை காலம் தொடங்கியநிலையில் காய்ச்சலின் பரவலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் தொற்றி வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் அந்த குடும்பத்தில் உள்ள அணைவருக்கும் காய்ச்சலானது வேகமாக பரவி வருகிறது.
undefined
இதனால் குடும்பம் குடும்பமாக மருத்துவமனை செல்லும் நிலை உள்ளது. இதனையடுத்து கோவையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த காரணத்தால் முககவசம் கட்டாயமாக்கப்பட்டது கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முகக்கவசம் கட்டாயம்
பேர் டெங்குவுக்காகவும், 23 பேர் காய்ச்சலுக்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு எச்சரிக்கைக்கு முன்னதாக 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இதே போல புதுச்சேரி மாநிலத்திலும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் அம்மாநிலத்தில் மருத்துவமனையில் இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்