தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு திடீரென புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்ததையடுத்து பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு திடீரென புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 909, செங்கல்பட்டில் 352, திருவள்ளூர் 100, கோயம்புத்தூரில் 96 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- தமிழகத்தில் 2000-ஐ கடந்தது தினசரி பாதிப்பு… சென்னையில் 909 பேருக்கு தொற்று!!
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;-
* பள்ளி வளாகத்தில் நுழையும் அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.
* வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபரை முறையாக பரிசோதித்து தனிமைப்படுத்த வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
* அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்திற்குள் சோப்பு, சானிடைசர் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும். இந்த அனைத்து அறிவுரைகளையும் கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இதனை அந்தந்தத பள்ளிகளின் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே மிருகத்தனமாக பாலியல் தொல்லை.. அலறியபடி மயங்கி விழுந்த மணம்பெண்..!