தமிழகத்தில் 2000-ஐ கடந்தது தினசரி பாதிப்பு… சென்னையில் 909 பேருக்கு தொற்று!!

Published : Jun 30, 2022, 09:51 PM IST
தமிழகத்தில் 2000-ஐ கடந்தது தினசரி பாதிப்பு… சென்னையில் 909 பேருக்கு தொற்று!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,069 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,069 ஆக அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: இந்தியாவில் அடிச்சு தூக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் பாதிப்பு புதிய உச்சம்..!


சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 909 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,026 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,26,065 ஆக உள்ளது. 

இதையும் படிங்க: மாய்மால வித்தை பண்ணுது பாஜக.. திரெளபதி முர்முவை ஆதரிக்காதீங்க.. ஒடிஷா-ஆந்திரா முதல்வர்களுக்கு திருமா கோரிக்கை

மாவட்ட வாரியாக: அரியலூர் 9, செங்கல்பட்டு 352, சென்னை 909, கோயம்புத்தூர் 96, கடலூர் 6, தர்மபுரி 4, திண்டுக்கல் 8, ஈரோடு 24, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 71, கன்னியாகுமரி 61, கரூர் 2, கிருஷ்ணகிரி 9, மதுரை 41, மயிலாடுதுறை 6, நாகப்பட்டிணம் 6, நாமக்கல் 12, நீலகிரி 4, பெரம்பலூர் 10, புதுகோட்டை 3, ராமநாதபுரம் 3, ராணிப்பேட்டை 22, சேலம் 28, சிவகங்கை 24, தென்காசி 14, தஞ்சாவூர் 12, தேனி 5, திருப்பத்தூர் 5, திருவள்ளூர் 100, திருவண்ணாமலை 13, திருவாரூர் 2, தூத்துக்குடி 38, திருநெல்வேலி 46, திருப்பூர் 16, திருச்சி 62, வேலூர் 10, விழுப்புரம் 18, விருதுநகர் 14 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விசில் கோலமிட சொன்ன தளபதி.! செய்வோம் என முழக்கமிட்ட சிங்கப்பெண்கள்.!
Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!