மக்களே அலர்ட்!! இனி முக கவசம் அணியாவிட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு வெளியானது..

By Thanalakshmi V  |  First Published Aug 31, 2022, 7:48 AM IST

சென்னை விமான நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 


இதுக்குறித்து சென்னை விமான நிலைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: நாட்டிலிருந்து கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் பயணிகள், வழியனுப்ப வருபவர்கள், விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:கவனத்திற்கு!! முதுநிலை பட்டத்தாரி ஆசிரியர் நியமனம்.. சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது தெரியுமா..?

Tap to resize

Latest Videos

முக கவசம் அணியாதவர்களை விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதே போன்று, அனைவரும் மாஸ்கை முறையாக வாய், மூக்கு மூடியிருக்கும் விதமாக முழு நேர பயணத்திலும் அணிந்திருக்க வேண்டும். 
முக கவசம் அணிவதால் சுவாச கோளாறுகள் ஏற்படும் பயணிகள், முறையாக அனுமதி பெற்று, முக கவசம் அணிவதிலிருந்து விலக்கு பெற்று கொள்ளலாம். 

மேலும் படிக்க:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்த அம்மா உணவகம்.. மூடுவிழா நடத்தும் சென்னை மாநகராட்சி - மக்கள் எதிர்ப்பு!

அதன்படி, முக கவசம் அணியாதவதற்களுக்கு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கி விட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிக்கும் வரையில், இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

click me!