தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

 
Published : Apr 27, 2018, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Marxist Communist Party Demonstration on Temporary Workers

விருதுநகர்

தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியின் முன்பு தரையில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராமர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், "தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளை செய்யும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்  

வழங்கப்படும் சம்பளத்தை நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும். 

ஊழியர்களுக்கு சட்டபூர்வமான உரிமைகள் வழங்க வேண்டும்" உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பினர்.  பேரூராட்சி முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்  இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!