திருமணம் முடிந்ததும் மணமக்களை காரில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் கோபியில் நடந்த திருமணத்திலோ மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் முடிந்ததும் மணமக்களை காரில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் கோபியில் நடந்த திருமணத்திலோ மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் கவிஅரவிந்த்(28). பி.இ. பட்டதாரி ஆவார். படிப்பை முடித்த பிறகு சொந்த கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அத்தாணி அருகே உள்ள வரப்பள்ளத்தை சேர்ந்த பிரவீணா(24)வுக்கும் கவி அரவிந்த்திற்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மணமகள் பிரவீணா ஐ.டி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். திருமணத்தில் இரு வீட்டு உறவினர்களும் திரளாக கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் மணமக்களை காரில் அழைத்து செல்வார்கள். ஆனால் மணமகன் வேண்டுகோள் இணங்க மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், மணமகள் பிரவீணாவுக்கும் அவரது பெற்றோர் நாட்டு மாடுகளை சீதனமாக வழங்கினர். இவர்களது திருமணம் நேற்று காலை பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் நடைபெற்றது.
முன்னாள் 2 மாட்டு வண்டிகள் செல்ல அதன் பின்னால் மணமக்கள் சென்ற மாட்டு வண்டி சென்றது. அவர்களது பின்னால் மேலும் 10 மாட்டு வண்டிகளில் உறவினர்கள் சென்றனர். கார்கள் புடைசூழ மணமக்கள் செல்லும் இடத்தில் மாட்டு வண்டிகள் மூலம் புடை சூழ மணமக்கள் சென்ற காட்சி பார்வையாளர்களை வியப்படைய செய்துள்ளது.