திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தலாம்.. நேரில் செல்ல தேவையில்லை.. தமிழக அரசு அரசாணை

By Thanalakshmi VFirst Published May 26, 2022, 4:50 PM IST
Highlights

திருமண சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பெறும் வசதியை அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதனால் இனி திருமண சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இல்லை.
 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,” தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 இன் படி திருமணத்தை பதிவு செய்வது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  திருமண பந்தத்திற்குள் நுழையும் தம்பதி  திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம்.  அப்போதுதான் அவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். திருமண பதிவு குறித்து ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவாறு சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,  சிறப்பு திருமணச் சட்டமும் இருக்கிறது.  இந்த சட்டங்களின் அடிப்படையில் தான் திருமணங்கள் பதிவு செய்யப்படுகிறது.  

மேலும் படிக்க: ஷாக்..! ஆவினில் பணி நியமன முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணம்.. 30 பேருக்கு சம்மன்..

இந்த பதிவானது விருப்பத்தின் அடிப்படையில் இருந்த நிலையில்  2009 ஆம் ஆண்டு சட்டம் கட்டாயமாக்கியது. திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் . அப்படி செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் திருமணத்தைப் பதிவுசெய்ய அசல் ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். 

திருமணச் சான்றிதழில் சிறுசிறு திருத்தங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதை மாற்ற  வேண்டும்.  இந்நிலையில் திருமண சான்றிதழை இணையதளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை.  திருமணம் முடிந்த தம்பதிகள்  https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தின் மூலம் பயனர் பதிவை உருவாக்கி திருமண பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 5 கோடி புத்தங்கள் தயார்.. இதுவரை 3.35 கோடி புத்தங்கள் அனுப்பி வைப்பு.. பள்ளிக் கல்வித்துறை தகவல்..

click me!