தமிழக -கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் முகாம் - அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை

Asianet News Tamil  
Published : Nov 02, 2016, 01:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
தமிழக -கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் முகாம் - அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை

சுருக்கம்

நீலகிரி மாவட்டம் தமிழக -கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் முகாமிட்டுள்ளனர். அவர்களை பிடிக்க அதிரடிப்படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியான மஞ்சூர், கெத்தை, கிண்டகொரை மற்றும் அப்பர்பவாணி உள்ளிட்ட இடங்களில் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்நத மாவோயிஸ்ட்கள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது.

மலைப்பகுதிகளில் இவர்களின் நடமாட்டத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மாநில காவல் துறையினர் அவர்களை தேடும் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவோயிஸ்ட்களின் தலைவர் விக்கரமகவுடா மற்றும் சோமன்பத்மநாபன் உட்பட 32 பேரின் புகைப்படங்களை பேனர்களாக கட்டி பொதுமக்களின் பார்வைக்காக காவல்துறையினர், முக்கிய பகுதிகளில் வைத்துள்ளனர்.

மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் மலைவாழ் மக்கள் மற்றும் மலை கிராமங்களில் வசிப்பவர்களிடம் புதியவர்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் ஒட்டியுள்ள மாவோயிஸ்ட்களின் புகைப்படங்களில் 12 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டை ஒட்டிய அப்பர்பவாணி மற்றும் கின்டகொரை,கெத்தை,முல்லை உள்ளிட்ட இடங்களில் தமிழக அதிரடி படையினர் 5 குழுக்களாக பிரிந்து தேடுதல வேட்டை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது.! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tamil News Live today 30 December 2025: Gold Rate Today - ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம்.! வெள்ளி விலையும் கடும் வீழ்ச்சி.! நகை கடைகளில் கூட்ட நெரிசல்.!