தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் என்ற போலி வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறி தமிழகம் மற்றும் பீகார் காவல்துறையால் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப், மேற்கு சம்பரான் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் சரண் அடைந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மணிஷ் காஷ்யப்பை மதுரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி வீடியோ வெளியிட்ட யூடியுபர்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலி வீடியோக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பரப்பப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. மேலும் வட மாநில தொழிலாளர்கள் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொய்யான செய்தியை பரப்பியவர்களை போலீசார் தேடி வந்தனர்.பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் 30 போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் தமிழக போலீசார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.
போலீசில் சரண் அடைந்த மனிஷ் காஷ்யப்
இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த மணிஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசிடம் புகார் மனு கொடுத்தன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மனீஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்ததனர். நீதிமன்றத அனுமதியோடு மணிஷ் காய்ஷப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.நேற்று விசாரணை முடிவடைந்ததையடுத்து மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் மனிஷ் காஷ்யப்பை ஆஜர்படுத்தினர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
இதனையடுத்து யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு வரும் 19ஆம் தேதிவரை 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் மனீஷ் காஷ்யப் மதுரை மத்திய சிறைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகத் தொடரப்பட்ட 14 வழக்குகள் தள்ளுபடி!