தூத்துக்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு...

 
Published : Dec 14, 2017, 08:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
தூத்துக்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு...

சுருக்கம்

man tried to attempt suicide with family in Thoothukudi

தூத்துக்குடி

சுகாதார சீர்கேடு செய்து வருபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஜம்புலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (41). இவர் ஒரு தையல் தொழிலாளி. இவர், தனது மனைவி இராமலட்சுமி, மகள் மற்றும் மகன்களுடன் நேற்று ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றார்.

வட்டாட்சியர் அறை அருகே சென்றதும் அங்கு தரையில் உட்கார்ந்துக் கொண்டு தனது உடலிலும், தனது  மனைவி, மகள் மற்றும் மகன்கள் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றினார். மேலும், தான் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் ஓடிவந்து அவர்கள் ஐந்து பேரையும் மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துணைக் கண்காணிப்பாளர் திருஞானசம்பந்தம் தலைமையில் காவலாளர்கள் முருகேசனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, "ஜம்புலிங்கபுரத்தில் கால்நடைகளை வளர்த்து வரும் நபர் ஒருவர், சுகாதார சீர்கேடு செய்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரத்தை சீரமைக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியும் தானும், தனது குடும்பத்தினரும் தற்கொலைக்கு முயன்றோம்" என்று அவர் தெரிவித்தார்.

அதனைக் கேட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் அவர் சமரசம் அடைந்து அங்கிருந்து சென்றார்.

இந்தச் சம்பவத்தால் வட்டாச்சியர் அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!