“தூக்கில் தொங்கியடி இருந்த ஆண் பிணம்” – தேனி போலீஸ் விசாரணை

 
Published : Nov 05, 2016, 06:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
“தூக்கில் தொங்கியடி இருந்த ஆண் பிணம்” – தேனி போலீஸ் விசாரணை

சுருக்கம்

தேனி அருகே அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள கைலாசநாதர் மலைக்கோவில் கிரிவலம் செல்லும் பாதையில் தனியார் தோப்பு உள்ளது.

இந்த தோப்பில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கியபடி 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று இருந்துள்ளது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தூக்கில் தொங்கி நபர் யார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராலும் கொலை செயது தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்