“அம்மாவின் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியே நடக்கும்” - நடிகை விஜயசாந்தி பேட்டி

 
Published : Nov 05, 2016, 05:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
“அம்மாவின் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியே நடக்கும்” - நடிகை விஜயசாந்தி பேட்டி

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகை விஜயசாந்தி தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிய நடிகை விஜயசாந்தி இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நல்ல நலமுடன் உள்ளார் என்றும், முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்த அவர், அம்மாவின் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடி நடக்கும் என தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி