‘குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 16 பாம்புகள்’ – கிருஷ்ணகிரியில் பரபரப்பு

First Published Nov 5, 2016, 5:59 AM IST
Highlights


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு வகையான 16 பாம்புகளை வனத்துறையினர் பிடித்ததால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லப்பாடி, கீழ்புதூர், காவேரிப்பட்டினம், வேலம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை சுற்றி வனப்பகுதி உள்ளதால் இந்த  வனப்பகுதியில் அனைத்து விதமான வன உயிரினங்களும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்லும்.

இந்நிலையில், இந்த கிராம பகுதிகளுக்குள் நுழைந்த 7 மலைபாம்புகள், 2 சாரைபாம்புகள், 4 நாகப்பாம்புகள், இரண்டு மன்னுலி பாம்பு, ஒரு கண்ணாடி விரியன் பாம்பு என மொத்தம் 16 பாம்புகளை வனவர் நாகேஷ் தலைமையிலான வனத்துறையினர் இன்று பிடித்தனர். பிடிப்பட்ட இந்த16 பாம்புகளும் நாரலப்பள்ளி காப்பு காட்டில் விடப்பட்டது.

மேலும் இது போன்ற வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால் அதை துன்புறுத்தாமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கும்படி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!