மலேசிய தொழிலதிபர் மாரடைப்பால் மரணம் - விமான நிலையத்தில் சோகம்

 
Published : Nov 09, 2016, 03:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
மலேசிய தொழிலதிபர் மாரடைப்பால் மரணம் - விமான நிலையத்தில் சோகம்

சுருக்கம்

சென்னை விமான நிலையத்தில், சொந்த ஊர் செல்வதற்காக வந்த தொழிலதிபர், திடீரென மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மலேசிய நாட்டை சேர்ந்தவர் மகேந்திரன் (51). மலேசிய தொழிலதிபர். இந்திய தமிழரான மகேந்திரன், பல ஆண்டுகளுக்கு முன் மலேசியாவுக்கு சென்று, அந்நாட்டிலேயே தங்கி குடியுரிமை பெற்றார். இவரது மனைவி உமையாள். இவர்களுக்கு 15 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.

கடந்த மாதம் மகேந்திரன், உறவினர்களை பார்ப்பதற்காகவும், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் ஒரு மாத சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். இங்கு பண்டிகை கொண்டாடிவிட்டு, பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

இதை தொடர்ந்து, நேற்று காலை 10.30 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக அனைவரும், சென்னை விமான நிலைய சர்வதேச முனையம் சென்றனர். அங்கு மனைவி, பிள்ளைகளை ஒரு இடத்தில் நிற்க வைத்த மகேந்திரன், போர்டிங் பாஸ் வாங்குவதற்காக வரிசையில் நின்றார்.

அப்போது, திடீரென அவர், நெஞ்சை பிடித்து கொண்டு கதறியடி கீழே சாய்ந்தார். இதை பார்த்ததும், அங்கு வரிசையில் நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மனைவி உமையாள் மற்றும் குழந்தைகள் அலறிக் கொண்டு அங்கு ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இதையறிந்த விமான நிலைய அதிகாரிகள் அங்கு விரைந்தனர். உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, மகேந்திரனை பரிசோதனை செய்தனர். அதில், அவர் மாரடைப்பால் இறந்தது தெரிந்தது. இதை கேட்டதும், அவரது மனைவி குழந்தைகள் கதறி அழுதனர்.
தகவலறிந்து விமான நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, சடலத்தை கொண்டு சென்றனர். 
இதற்கிடையில் மகேந்திரனின் உறவினர்களும் அங்கு சென்றனர். இதையடுத்து, சடலத்தை மலேசியாவுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். விமான நிலையத்தில், சொந்த ஊர் செல்வதற்காக வந்த தொழிலதிபர், திடீரென மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!