மதுரை சிறைத்துறை பெண் எஸ்.பி. ஊர்மிளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் ரவுடி புல்லட் நாகராஜ் மீது 3
பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை சிறைத்துறை பெண் எஸ்.பி. ஊர்மிளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் ரவுடி புல்லட் நாகராஜ் மீது 3
பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி புல்லட் நாகராஜ். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புல்லட் நாகராஜனின் அண்ணன் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், புல்லட் நாகராஜனின் அண்ணன், அதிக தூக்க மாத்திரைகளை கேட்டு சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சிறையில்
வழக்கமான மருத்துவ ளசோதனையின்போது, பெண் டாக்டரிடம் தனக்கு அதிக தூக்க மாத்திரைகள் தரும்படி வற்புறுத்தியதாக
தெரிகிறது. அதற்கு அந்த டாடக்டர் மறுத்துவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ரவுடி, டாக்டரை தாக்க முற்பட்டதாகவும்
தெரிகிறது. இது குறித்து எஸ்.பி. ஊர்மிளாவிடம், டாக்டர் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் ரவுடியை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, புல்லட் நாகராஜனின் அண்ணன், நன்னடத்தை விதி காரணமாக விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்த அவர், புல்லட் நாகராஜனிடம், இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி புல்லட் நாகராஜன், மதுரை மத்திய சிறை எஸ்.பி. ஊர்மிளா மற்றும் குறிப்பிட்ட மருத்துவருக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.
அதில் என் ஜெயில் அனுபவம் உன் வயது. ஆனா, யாரா இருந்தாலும் ஜெயில் கேட்ட விட்டு வெளியே வந்துதானே ஆகணும். நான் ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா பசங்க ஏதாச்சும் பண்ணுனா... அதுக்கு நான் பொறுப்பில்ல... பொம்பளையா இருக்கீங்க... திருந்துங்க... என்று அந்த வாட்ஸ் அப் ஆடியோவில் பேசியுள்ளார். இது தொடர்பாக மதுரை மத்திய சிறை அலுவலர் ஜெயராமன் புகார் கொடுத்ததன் பேரில், புல்லட் நாகராஜ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார்.கொலை மிரட்டல், பொது இடத்தில் அருவருப்பான வார்த்தைகளால் பேசி மிரட்டுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் அச்சுறுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் ரவுடி புல்லட் நாகராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.