மதுரை மாவட்டத்துககு இன்று ஒரு நாள் 144 தடை உத்தரவு அமல்படுத்த, கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்துககு இன்று ஒரு நாள் 144 தடை உத்தரவு அமல்படுத்த, கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
மூக்கையா தேவரின் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்துள்ள மூக்கையா தேவன் நினைவிடத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், தேவர் இனத்தை சேர்ந்த மக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மூக்கையா தேவரின் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வண்டிகளில் செல்வதற்கும் திறந்த வாகனங்களில் செல்வதற்கும் மாவட்ட கலெக்டர் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் இதில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தடை நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கையாத் தேவர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1952 முதல் 1979-ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.